Home உலகம் இங்கிலாந்து ஓவியக் கண்காட்சியில் இடம்பெறும் இந்தியப் பெண் விஞ்ஞானியின் ஓவியம்

இங்கிலாந்து ஓவியக் கண்காட்சியில் இடம்பெறும் இந்தியப் பெண் விஞ்ஞானியின் ஓவியம்

681
0
SHARE
Ad

LIVE.RR_Guptaலண்டன், ஜூலை 23- இங்கிலாந்தில் உள்ள பெருமை வாய்ந்த ராயல் சொசைட்டி நிறுவனம் கோடைக்கால அறிவியல் கண்காட்சிகளை நடத்தி வருகின்றது.

இதில் சமூகம் மற்றும் அறிவியல் தொடர்பான பல்வேறு வகைப்பட்ட செயல்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் செயல்பாடுகளையும், அறிவியல் விஞ்ஞானிகளின் ஓவியங்களையும் கண்காட்சியில் வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி அந்நாட்டில் உள்ள உடா பிரித் என்ற மனவியல் நிபுணர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓவியக் கண்காட்சியில் கொல்கத்தாவில் பிறந்த சுனேத்ரா குப்தா என்ற விஞ்ஞானியின் ஓவியமும் இடம் பெற்றுள்ளது. இவர் பௌதிகம் மற்றும் ரசாயனத் துறைகளில் தேர்ச்சி பெற்று, தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

விலங்கியல் துறையில் பணிபுரியும் இவர், ராயல் சொசைட்டி நிறுவனம் மூலம் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். மலேரியா, இன்ப்ளுயன்சா மற்றும் மூளைக் காய்ச்சல் போன்றவை பரவுவதில் தொற்றுநோய்க் கிருமிகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிகளில் தற்போது இவர் ஆய்வு நடத்தி வருகின்றார்.

மேரி கியூரி போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் தனது ஓவியமும் இடம்பெறுவது பற்றி இவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். விஞ்ஞானமுறைகளைப் புரிந்து மேம்படுத்தும் அறிவியல் திட்டங்களில் பெண்களின் பங்கு வளர்ந்து வருகின்றது. இதன் அடிப்படையில் தானும் பங்காற்றுவது குறித்து மிகவும் பெருமை அடைவதாக சுனேத்ரா தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, சுனேத்ரா ஐந்து சிறந்த நாவல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.