Home கலை உலகம் நடிகர் சூர்யா பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சூர்யா பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்

739
0
SHARE
Ad

ஜூலை 23- நடிகர் சூர்யா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அவருடைய ரசிகர்கள் ரத்ததானம், சமூக சேவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

surya_13499526567‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அறிமுகத்துடன் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்த சூர்யா, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘ப்ரெண்ட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

#TamilSchoolmychoice

happy-birthday-suryaஅதைத் தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’ ஆகிய படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து திறமையான நடிகர் என்பதை நிரூபித்தார். இவர் தான் நடித்த 29 படங்களிலேயே தமிழில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். தற்போது ‘சிங்கம் 2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகை ஜோதிகாவை கடந்த 2006- ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ‘அகரம் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி, அதன்மூலம் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்து வருகிறார்