Home அரசியல் ம.சீ.ச கட்சியில் இருந்து 5 தலைவர்கள் இடைநீக்கம்!

ம.சீ.ச கட்சியில் இருந்து 5 தலைவர்கள் இடைநீக்கம்!

605
0
SHARE
Ad

Chua Soi Lekகோலாலம்பூர், ஜூலை 23 – நடந்த முடிந்த மே 5 பொதுத்தேர்தலில், தனது கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்கள் தங்களது சக வேட்பாளர்களுக்கு பிரச்சாரங்களில் உதவி செய்யவில்லை என்ற  காரணத்தினால்  அவர்களை கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்வதாக மசீ ச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார்.

இது குறித்து சொய் லெக் மேலும் கூறுகையில், இந்த 5 தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது  உதவி செய்யவில்லை என்று  ம.சீ.ச ஒழுங்கு நடவடிக்கை குழுவில் பல புகார்கள் முன் வைக்கப்பட்டன என்றும், இன்று கூடிய ம.சீ.ச தலைமைத்துவ கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு சரியான ஆதாரங்களுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் சொய் லெக் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பத்து காஜா பிரிவு துணைத்தலைவர் லீ கோன் இன் 3 வருடங்களுக்கும், சிரம்பான் பிரிவு தலைவர் பீட்டர் லாய், செர்டாங் பிரிவு தலைவர் மற்றும் மத்திய செயற் குழு உறுப்பினரான லியூ யென் கியாங், பெனாம்பாங் பிரிவு துணை இளைஞர் அணித் தலைவர் ஜேக் லியூ ஆகியோர் 1 வருடத்திற்கும், செர்டாங் பிரிவு துணைத்தலைவர் ஹோ ஹீ லீ 6 மாதத்திற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

எனினும், அவர்கள் இது குறித்து 14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று சொய் லெக் இன்று மாலை கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், லீ க்கு மட்டும் ஏன் 3 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த சுவா, பொதுத்தேர்தலில் லீ தனது சக வேட்பாளர்களுக்கு பெரிதும் உதவுவார் என்று தேசிய முன்னணியும், ம.சீ.ச வும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் அவர் அதை செய்யவில்லை என்று சொய் லெக் தெரிவித்துள்ளார்.