Home நாடு “மகாதீர் அம்னோவை பலப்படுத்தினார், ஆனால் தே.மு வை பலவீனமடைய செய்துவிட்டார்” – சுவா சொய் லெக்

“மகாதீர் அம்னோவை பலப்படுத்தினார், ஆனால் தே.மு வை பலவீனமடைய செய்துவிட்டார்” – சுவா சொய் லெக்

702
0
SHARE
Ad

ChuaSoiLek01 (1)கோலாலம்பூர், பிப் 4 – டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக இருந்த காலத்தில் அரசியல் ரீதியாக அம்னோவை வலுப்படுத்தினார். ஆனால் தேசிய முன்னணியில் உள்ள உறுப்புக் கட்சிகளை சக்தியற்றவைகளாக மாற்றிவிட்டார் என்று மசீச கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.

கடந்த 3 பொதுத் தேர்தல்களில் மலாய் நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், அவை சீன சமூகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இது பற்றி சுவா தனது சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ள அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“வலுவான மலாய் அரசாங்கம் அரசியல், பொருளாதாரம், உரிமைகள் ஆகியவற்றில் ஆக்கிரமித்துள்ள நிலை கண்டு சீனர்கள் கவலையடைந்துள்ளனர். அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை (The New Economic Policy) மற்றும் மோசமான செயல்திறனைக் கண்டு, சீனர்கள் அதன் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.”

“அம்னோ உச்சமன்றம் எடுக்கும் பல முடிவுகள் தான் அமைச்சரவையின் முடிவாக உள்ளது. இதனால் அம்னோவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அது பாதகமான விளைவை ஏற்படுத்துகின்றது. இது குறித்து ஏற்கனவே தேசிய முன்னணியின் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளேன்.” இவ்வாறு சுவா தெரிவித்துள்ளார்.