Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல்: சுவா சொய் லெக் போட்டியிடவில்லை!

மசீச தேர்தல்: சுவா சொய் லெக் போட்டியிடவில்லை!

747
0
SHARE
Ad

Chua Soi Lekகோலாலம்பூர், டிச 4 – வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவது இல்லை என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார்.

கடந்த மே5 பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக கட்சி அறித்தது போல், தான் தனது பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் சொய் லெக் குறிப்பிட்டார்.

அத்துடன், தலைவர் பதவியைத் தற்காத்துக்கொள்ளுமாறு ஆதரவாளர்கள் தன்னை வற்புறுத்துவதாகவும் சொய் லெக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கட்சியின் ஒற்றுமை குறித்து கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியாங் லாய் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தனிப்பட்ட முறையிலானது அல்ல என்றும் சொய் லெக் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் மூலம் நிலுவையில் இருக்கும் பல முடிவுகளுக்குத் தீர்வு காணவிருப்பதாகவும், இதற்கு லியோவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சொய் லெக் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக முன்னாள் தலைவர் ஓங் தி கியாட் , துணைத் தலைவர் லியோ தியாங் லாய், ம.சீ.ச உதவித் தலைவர் கான் பிங் சியூ ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

மசீச வைப் பொறுத்தவரை தலைவர், துணைத்தலைவர், 4 உதவித்தலைவர்கள் மற்றும் 25 மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.