Home உலகம் எகிப்து முன்னாள் முகமது மோர்ஸி கடத்தி சிறை வைப்பு: ராணுவம் மீது குடும்பத்தினர் புகார்

எகிப்து முன்னாள் முகமது மோர்ஸி கடத்தி சிறை வைப்பு: ராணுவம் மீது குடும்பத்தினர் புகார்

617
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 23- எகிப்தில் ராணுவ புரட்சி மூலம் அதிபர் முகமது மோர்ஸி பதவி இழந்தார்.

egyptதற்போது அவர் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளார். அவரை விடுவித்து மீண்டும் அதிபராக்க கோரி அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரை கடத்தி ராணுவம் சிறை வைத்திருப்பதாக மோர்ஸி யின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து முர்சியின் மகள் ஷாஸ்மா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில், ‘ராணுவம் மூலம் கடந்த 3-ந் தேதி அன்று எனது தந்தை கடத்தப்பட்டார். அவரை பற்றிய தகவல் எதுவும் இல்லை. அவரது பாதுகாப்புக்கு ராணுவமே பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.

முர்சியின் மகன் ஒசாமா வக்கீல் ஆக உள்ளார். தனது தந்தையின் கைது குறித்து அவர் கூறும் போது, அவரது கைது நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

மேலும், கூறும் போது, கடந்த 3-ந்தேதி தான் கடைசியாக எனது தந்தையை சந்தித்தேன். அதன் பிறகு அவருடன் எனக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.