Home உலகம் முன்னாள் அதிபர் மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை – எகிப்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

முன்னாள் அதிபர் மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை – எகிப்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

715
0
SHARE
Ad

Mohammed-Morsi_2273152bகெய்ரோ, ஏப்ரல் 21 – எகிப்து முன்னாள் அதிபரான முகமது மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு மோர்சியின் ஆட்சியை விரட்டி விட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

பின்னர் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குற்ற சம்பவங்களுக்கு எதிராக மோர்சி மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். அதில் ஒன்று தான், 2012-ஆம் ஆண்டு அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டது.

mohamed-mursiஇந்த வழக்கில் தான் தற்போது எகிப்து கெய்ரோ நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. தண்டனை வழங்கப்பட்ட மோர்சி, அலெக்சாண்டிரியா நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

2012-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியினர் மோர்சிக்கு எதிராக அதிபர் மாளிகைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்தது. இதை பயன்டுத்தி மோர்சி ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.