Home நாடு நேபாளத்தில் மாயமான மலேசியரைக் கண்டுபிடித்தால் சன்மானம் – குடும்பத்தினர் அறிவிப்பு

நேபாளத்தில் மாயமான மலேசியரைக் கண்டுபிடித்தால் சன்மானம் – குடும்பத்தினர் அறிவிப்பு

492
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 21 – நேபாள மலையில் காணாமல் போன மலேசியர் டென்னிஸ் லீ தியான் போவை கண்டுபிடிப்பவர்களுக்கு 18,000 ரிங்கிட் (நேபாள மதிப்பில் 500,00 ரூபாய்) சன்மானமாக அளிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Dennis Lee

 

#TamilSchoolmychoice

(காணாமல் போன மலேசியர் டென்னிஸ் லீ தியான் போ)

 நேபாளத்தில் மலையேறச் சென்ற லீ-யை கடந்த ஏப்ரல் 5 -ம் தேதி முதல் காணவில்லை.

நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் மலேசிய வெளியுறத்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள அதிகாரிகளுடன் தாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து லீ -யை தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, மலேசியரான டென்னிஸ் லீ தியான் போ (வயது 47) பிலிப்பைன்சைச் சேர்ந்த தனது உடன் பணியாற்றும் 8 பேர் கொண்ட குழுவுடன், நேபாளில் உள்ள அன்னபூர்ணா சர்கியூட் என்ற இடத்தை அளவிடச் சென்றார்.

முதல் நாள் மலையேற்றத்தின் போது கோர்பானி என்ற இடத்தில் உள்ள கோப்ரா டண்டா த்ரேக் என்ற பகுதியில்  லீ மாயமானதை, பின்னர் தான் அக்குழு உணர்ந்துள்ளது.

கோப்ரா டண்டா த்ரேக் என்ற பகுதி சுமார் 3,500 மீட்டர் மற்றும் 3,800 மீட்டர் உயரம் கொண்டது.

இந்நிலையில், காணாமல் போன லீயை தேடுவதில் நேபாள அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லீ-யைப் பற்றி தகவல் தெரிந்தால் வெளியுறத்துறையைச் சேர்ந்த தகவல் மற்றும் பொது தூதரக விவகார அமைச்சின் துணை இயக்குநர் மெகாட் ஷா ஹாமெருல் மெகாட் முகமட் யூசோப்பை 03-88874376 அல்லது 013-3190824 என்ற செல்பேசி எண்களையோ அல்லது  megtshah@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.