கெய்ரோ, செப்.6- எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி பதவி பறிக்கப்பட்டதால் சகோதரத்துவ கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 1,000 பேர் உயிர் இழந்தனர். மோர்ஸி உள்பட பல தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அவருடைய சகோதரத்துவ கட்சி அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) என்றே பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனவே இந்த அங்கீகாரத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்று சகோதரத்துவ கட்சிக்கு வழங்கிய என்.ஜி.ஓ. அங்கீகாரத்தை ரத்து செய்ய இடைக்கால அரசு முடிவு செய்தது.
அடுத்த வாரம் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இதை சமூகநல மந்திரியின் செய்தித்தொடர்பாளர் ஹானி மஹானா சூசகமாக தெரிவித்தார்.