Home கலை உலகம் மலையாள திரையுலகை புறக்கணிக்கும் நயன்தாரா

மலையாள திரையுலகை புறக்கணிக்கும் நயன்தாரா

646
0
SHARE
Ad

செப். 7- மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு அறிமுகமானாலும், மலையாள சினிமாவில் நடிப்பதற்கு நயன்தாரா ரொம்பவும் தயக்கம் காட்டியே வருகிறார்.

nayan-readதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, சமீபத்தில் கூட மலையாள இயக்குனர் மதுபாய் இயக்கத்தில் பிரித்விராஜ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால், இந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிக் கழித்துவிட்டார். ஆனால், மலையாள ரசிகர்களோ நயன்தாராவின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நயன்தாரா தமிழில் நடித்த ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ ஆகிய படங்கள் முடிவடைந்து வெளியாகும் தருவாயில் உள்ளது.

மேலும், ‘இது கதிர்வேலன் காதல்’, ‘அனாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயம்’ ரவி இயக்கும் ஒரு படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.