இது குறித்து அன்வார் மேலும் கூறுகையில், “சஞ்சீவனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை தனது பாதுகாப்பு வட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்று தேசிய காவல்துறை தலைவரை கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் இன்னும் விரிவாக போகவில்லை இருப்பினும், தற்போது போதுமான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம்” என்று அன்வார் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
‘மை வாட்ச்’ என்ற அரசு சாரா அமைப்பின் தலைவரான சஞ்சீவன் கடந்த சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். தற்போது சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது.