Home 13வது பொதுத் தேர்தல் நிராகரிக்கப்படும் தேர்தல் மனுக்களுக்கு விதிக்கப்படும் செலவுத் தொகை மிக அதிகமானது – அன்வார்

நிராகரிக்கப்படும் தேர்தல் மனுக்களுக்கு விதிக்கப்படும் செலவுத் தொகை மிக அதிகமானது – அன்வார்

447
0
SHARE
Ad

ANWARகோலாலம்பூர், ஜூலை 29 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் மனுக்களை நிராகரிக்கும் தேர்தல் நீதிமன்றம், அதற்கு செலவுத் தொகையாக  மனுதாரர்களுக்கு  உத்தரவிடும் தொகை, மிக அதிகம் என்று எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அது போன்ற அதிகமான செலவுத் தொகையை கொடுக்க உத்தரவிடுவது, மேலும் அது போன்ற மனுக்களை தடுக்கும் நோக்கத்தோடு செய்யப்படுவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

பாலிக் புலாவ் தேர்தல் மனுவை மேற்கோள் காட்டிய அன்வார், அத்தொகுதி மனுதாரர் முகமட் பாக்கிதார் வான் சிக் 120,000 ரிங்கிட் செலவுத் தொகை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், இது போன்ற உத்தரவிடப்படும் செலவுத் தொகை பொது நல வழக்கு என்னும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், இது போன்ற தேர்தல் மனுக்களை நிராகரித்துவிட்டு, அதற்கான காரணங்களை அவர்கள் கூறுவது அற்பமாக இருக்கிறது என்றும் அன்வார் கூறியுள்ளார்.

தெலுக் பாஹாங் சட்டமன்ற தொகுதி முடிவுகளை எதிர்த்து பினாங்கு பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஹாலிம் ஹுசைன் தாக்கல் செய்திருந்த மனுவையும், பாலிக் புலாவ் தொகுதி முடிவுகளை எதிர்த்து பிகேஆர் வேட்பாளர் முகமட் பாக்கிதார் வான் சிக் தாக்கல் செய்திருந்த தேர்தல் மனுவையும், கடந்த ஜூலை 23 ஆம் தேதி தேர்தல் நீதிமன்றம் நிராகரித்தது.

அதோடு, அப்துல் ஹாலிம் 10,000 ரிங்கிட்டும், முகமட் பாக்கிதார் 30,000 ரிங்கிட்டும்  செலவுத் தொகையாகத் தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம், தித்திவாங்சா பாஸ் வேட்பாளர் அகமட் ஸாம்ரிக்கு 40,000 ரிங்கிட் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.