Home நிகழ்வுகள் ‘புதியதோர் உலகம் செய்வோம்’- 10ஆவது கலைவிழா

‘புதியதோர் உலகம் செய்வோம்’- 10ஆவது கலைவிழா

617
0
SHARE
Ad

mansor-osmanபட்டர்வொர்த், பிப்.7- செபராங் பிறை எம்.ஜி.ஆர். பொதுநல இயக்கமும் பினாங்கு மாநில திருவள்ளுவர் கழகமும் இணைந்து ‘புதியதோர் உலகம் செய்வோம்’ எனும் இவ்விழாவை பத்தாவது முறையாகக் கொண்டாடவுள்ளது.

இந்நிகழ்ச்சியானது வரும் சனிக்கிழமை 9.2.2013 ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு பட்டர்வொர்த் டெவான் ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும்.

பத்தாவதாக ஆண்டாக நடத்தப்படும் இவ்விழாவில் உயர் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் சிலருக்கு மடிக்கணினிகளும், 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருள்களும் மேலும் இதர 100 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பினாங்கு மாநில முதலாம் நிலை துணை முதல்வர் டத்தோ டாக்டர் மன்சோர் ஒஸ்மான் மற்றும் பினாங்கு இந்தியர் கலை கலாச்சார செவைக் கழகத் தலைவர் டத்தோ கா.புலவேந்திரன் ஆகிய இருவரும் முக்கிய பிரமுகர்களாக் கலந்து கொள்ளவிருக்கும் இந்த இலவச கலை நிகழ்ச்சிக்கு பொது மக்கள் திரளாக வருகையளித்து ஆதரவளிக்க வேண்டுமென்று, இதன் ஏற்பாட்டாளர் சுப. நடராசன் கேட்டுக் கொள்கிறார்.