Home அரசியல் இஸ்லாமை அவமதிப்பதால் நாட்டில் பல பிரச்சனைகள் உருவாகும் – முகைதீன் கருத்து

இஸ்லாமை அவமதிப்பதால் நாட்டில் பல பிரச்சனைகள் உருவாகும் – முகைதீன் கருத்து

620
0
SHARE
Ad

MUYI2கோலாலம்பூர், ஜூலை 31 – இஸ்லாம் மதத்தை இழிவு படுத்துவது போலான நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்றால், மற்ற இஸ்லாம் நாடுகளில் நடப்பது போல் இங்கும் பல பிரச்சனைகள் உருவாகலாம் என்ற துணைப்பிரதமர் முகைதீன் யாசின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “இது போன்ற இஸ்லாமுக்கு எதிரான நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது சமூகத்தில் போதுமான புரிந்துணர்வு இல்லை என்று தெரிகிறது. இந்து மதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினரை இஸ்லாம் மதத்தினர் அவமதிப்பதில்லை.ஆனால் இஸ்லாம் அல்லாதவர்கள் நம்மை அவமதிக்கிறார்கள் ” என்றும் முகைதீன் தெரிவித்துள்ளார்.

அதோடு, “இஸ்லாமை அவமதிப்பது போல் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுபவர்கள் மீது மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ( Malaysian Communications and Multimedia Commission) மற்றும் உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் முகைதீன் நேற்று புத்ர ஜெயாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice