Home கலை உலகம் ஜனாதிபதி, 4முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்திய திரைப்பட 100-வது ஆண்டு விழா சென்னையில் நடக்கிறது

ஜனாதிபதி, 4முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்திய திரைப்பட 100-வது ஆண்டு விழா சென்னையில் நடக்கிறது

781
0
SHARE
Ad

ஆகஸ்ட் 1- தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது.

இதில் தென்னிந்தியாவின் நான்கு முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் இவ்விழாவினை அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

#TamilSchoolmychoice

21-ம்தேதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைப்பெறும். அன்றைய தினம் மாலை 4 மணி நேரம் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

00-Years-Of-Indian-Cinema22-ம் தேதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.

23-ம் தேதி மாலை தென்னிந்திய மொழி கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இனிய விருந்து நடைபெறும், தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் ஒன்று சேரும் குடும்ப விழா.

24-ம்தேதி இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத சரித்திர விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா முதல் அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் அனைத்து மொழியைச் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இந்த விழா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டுடியோ முதலாளிகள் என அத்தனை சங்கங்களையும் சார்ந்தவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது.

f60ae63d-9fc5-4d31-aadf-e38360d21fabHiResஇந்த விழாவில் கலந்து கொள்ளவும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மற்றும் பங்களிப்புகளுக்காகவும் நான்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் சாதனையாளர்கள் சென்னையில் சங்கமிக்க வேண்டும் என்பதால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் உலகமெங்கும் செப்டம்பர் 18, முதல் 24 வரை நடைபெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இதற்காக தென்னிந்திய திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு அளிப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது மட்டுமல்லாமல் சென்னை நகரமெங்கும் வண்ணமயமான அலங்காரங்கள், திரையரங்குகளில் சிறந்த இந்தியத் திரைப்படங்கள், பூங்காக்களிலும் சென்னையில் முக்கிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், திரைப்பட போட்டிகளில் வெற்றிப் பெற்ற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைப்பெறும்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்த 2 அயிரத்திற்கும் மேற்பட்ட அத்தனை கலைஞர்களையும் நம் தமிழகமும் சென்னை மாநகர மக்களும் வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.