Home கலை உலகம் இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவில் அஜீத் கலந்து கொள்கிறார்

இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவில் அஜீத் கலந்து கொள்கிறார்

605
0
SHARE
Ad

செப். 13- இந்திய திரைப்படத்துறையின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தினால் சென்னையில் நடத்தப்பட உள்ளன.

29-1367210946-ajith-02வரும் 21-ம்தேதி முதல் 24-ம் தேதி வரையிலான இந்த மாபெரும் விழா ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுகிறது.

இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் இந்த விழாவினை, தமிழக முதலமைச்சர் 21-ம் தேதியன்று தொடங்கி வைக்கின்றார்.

#TamilSchoolmychoice

முதல் நாள் தமிழ்த் திரையுலக நிகழ்ச்சிகளும், அதன்பின் தொடர்ந்து கன்னடம், மலையாளம் திரைத்துறை நிகச்சிகளும் நடைபெற உள்ளன.

தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

இவர்கள் தவிர மற்ற திரையுலகங்களின் பிரபலங்களான அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்பாபு, நாகார்ஜுனா, அம்பரீஷ், சிவராஜ்குமார், மம்மூட்டி மற்றும் மோகன்லால் போன்றோரும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளும் இயல்பில்லாத நடிகர் அஜீத்தும் இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.