Home நாடு சஞ்சீவனின் உடல்நிலையில் முன்னேற்றம் – அறுவை சிகிச்சைக்கு இன்னும் தாயாராகவில்லை – சுப்ரா

சஞ்சீவனின் உடல்நிலையில் முன்னேற்றம் – அறுவை சிகிச்சைக்கு இன்னும் தாயாராகவில்லை – சுப்ரா

492
0
SHARE
Ad

DR-SUBRA

கோலாலம்பூர், அகஸ்ட் 1 – குற்ற தடுப்பு ஆர்வலர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை எந்த காரணத்திற்காகவும் தாமதிக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், சஞ்சீவனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு அவரது உடல்நிலை தயாரான பின்னர் உடனடியாக அவரது விலாவில் பாய்ந்துள்ள தோட்டாக்கள் அகற்றப்படும் என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவரது உடம்பில் பாய்ந்துள்ள தோட்டாக்களால் பெரிய அளவில் பிரச்சனை இல்லை.ஆனால் அது விளைவித்துள்ள சேதங்களுக்கு மத்தியில் அந்த தோட்டாக்கள் இருக்கும் இடத்தை அடைவது தான் பிரச்சனையாக இருக்கிறது” என்று சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சஞ்சீவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் அவரது உடல் நிலை இன்னும் அதற்கு தயாராகாதது தான். மற்றபடி இது முழுவதும் மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் சுப்ரா விளக்கமளித்துள்ளார்.

‘மை வாட்ச்’ (Malaysian Crime Watch Task Force) என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவரான ஸ்ரீ சஞ்சீவன் கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் 4 மணியளவில் பகாவ், தாமான் செம்பாக்கா என்னுமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

இதுவரை நான்கு மருத்துவமனைகளுக்கு அவர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டு, இறுதியாக தற்போது அவருக்கு சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.