Home அரசியல் வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் பணமா? ஆதாரம் காட்ட முடியுமா? – அன்வார், கர்பால் சிங் சவால்

வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் பணமா? ஆதாரம் காட்ட முடியுமா? – அன்வார், கர்பால் சிங் சவால்

527
0
SHARE
Ad

anwar-karpalகோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – வெளிநாட்டு வங்கிகளில் எங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாக சிலர் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள். அதற்கு அவர்களால் தகுந்த ஆதாரங்களைக் காட்ட முடியுமா என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக தலைவர் கர்பால் சிங் ஆகியோர் சவால் விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் அன்வாரின் சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில், சில மர்ம கடிதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் அன்வாருக்கும், கர்பால் சிங்கிற்கும் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தன.

கர்பால் சிங்கிற்கும், அன்வாருக்கும் இடையிலான வங்கி சொத்துக்களை வெளிக்கொண்டுவருதல் (Bankleaks Anwar/Karpal) என்று அக்கடிதத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிந்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து பெர்மாத்தாங் பாவ் தொகுதி முன்னாள் தேசிய முன்னணி வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில் கூறுகையில், அக்கடிதம் தொடர்பாக தனக்கு கிட்டத்தட்ட 6000 பேரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த இரு எதிர்கட்சித் தலைவர்களும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக மஸ்லான் கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைக் காட்ட முடியுமா? வங்கிக் கணக்கு எண்களையும், காசோலை எண்களையும் வெளியிட முடியுமா? என்று மஸ்லானுக்கு அன்வாரும், கர்பால் சிங்கும் சவால் விடுத்துள்ளனர்.

இது போன்று குற்றம் சாட்டுவதை விட இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும், காவல்துறையிடமும் மஸ்லான் புகார் அளிக்கட்டும் என்று கர்பால் கூறியுள்ளார்.