Home இந்தியா பாகிஸ்தான் செயல் கோழைத்தனமானது: நரேந்திர மோடி ஆவேசம்

பாகிஸ்தான் செயல் கோழைத்தனமானது: நரேந்திர மோடி ஆவேசம்

1120
0
SHARE
Ad

BL29RASH1_1096847gஆமதாபாத், ஆக. 6– பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானதை ஏற்க முடியாது என்று நரேந்திர மோடி கூறினார்.

பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியான சம்பவம் குறித்து குஜராத் முதல்– மந்திரியும், பாரதீய ஜனதா பிரசார குழு தலைவருமான நரேந்திர மோடி கூறியதாவது:–

பாகிஸ்தான் தாக்குதல் கோழைத்தனமான செயல். எல்லையைப் பாதுகாக்கும் விஷயத்தில் மத்திய அரசு அக்கறையின்மையுடன் செயல்படுகிறது. காஷ்மீர் எல்லையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டது ஏற்க கூடியதல்ல.

#TamilSchoolmychoice

சீனாவின் ஊடுருவல், பாகிஸ்தானின் கோழைத்தனமான தாக்குதல் போன்றவைகளில் இருந்து இந்திய எல்லையை பாதுகாக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. மத்திய அரசு எப்போது விழித்தெழும் என்று தெரியவில்லை.

பலியான வீரர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.