நியூயார்க், ஆக. 7- அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடம் வகிக்கிறார்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ இதழ், இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்த வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ரூ.134 கோடியுடன் 51-வது இடம் வகிக்கிறார்.
வீராங்கனைகளில் நிறைய வருவாய் திரட்டும் பட்டியலில் ரஷிய டென்னிஸ் புயல் மரிய ஷரபோவா தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் தொகை ரூ.176 கோடி. இதில் விளம்பரம் மற்றும் இதர வர்த்தகத்தின் மூலம் சேகரித்த ரூ.140 கோடியும் அடங்கும்.
அவருக்கு அடுத்தபடியாக வீராங்கனைகளில் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருடாந்திர வருமானம் ரூ.125 கோடியாக உள்ளது.