Home நாடு சபா ஊடுருவலை மறைத்த உளவுத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை!

சபா ஊடுருவலை மறைத்த உளவுத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை!

737
0
SHARE
Ad

Detective-Corporal-Hassan-Ali-Basariகோத்தா கின்பாலு, ஆகஸ்ட் 7 – தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்து முன்பே தெரிந்திருந்தும் அதை மூடிமறைத்த குற்றத்திற்காக காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை சுலு தீவிரவாதிகளை சபா மாநிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். அப்போது மலேசியப் படையினருக்கும், சுலுப் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

இது குறித்த தகவல் முன்பே தெரிந்திருந்தும் அதை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க மறுத்த உளவுத்துறை அதிகாரி ஹசான் அலி பஸாரி (வயது 61) என்பவருக்கு நேற்று கோத்தா கினபாலு உயர் நீதிமன்ற நீதிபதி பி.ரவீந்திரன் இந்த தண்டனையை விதித்தார்.

#TamilSchoolmychoice