“பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியதற்காக நான் அவருக்கு வாழ்த்து கூறியதோடு, இந்திய சமுதாயத்திற்கு நிறைய செய்துள்ளீர்கள். இந்த நல்ல பெயர் இருக்கும் போதே ஓய்வு பெற்று விடுங்கள் என்று ஆலோசனை கூறினேன். ஆனால் சாமிவேலு அதை மறுத்து தான் தொடர்ந்து பதவியில் இருக்கப்போவதாகக் கூறினார்” என்றும் படாவி கூறியுள்ளார்.
பிரச்சனைகளைக் கையாள்வதில் சாமிவேலு பின்பற்றிய வழிகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறிய படாவி, சாமிவேலுவுக்கு பலவீனங்கள் இருந்தாலும் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதால் அவருடன் இணைந்து செயல் படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“நான் அவரை வற்புறுத்தினேன். இருந்தாலும் கூட்டணிக்கட்சிகளுக்கிடையே சில முடிவுகளை எடுப்பதற்கு ஒரு வரம்பு உண்டு” என்று படாவி கூறியுள்ளார்.