Home கலை உலகம் தலைவா அரசியல் படமல்ல: நடிகர் விஜய்

தலைவா அரசியல் படமல்ல: நடிகர் விஜய்

606
0
SHARE
Ad

ஆக. 8- ‘தலைவா’ படம் நாளை  (9–ந்தேதி) முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

#TamilSchoolmychoice

Vijay-in-Thalaiva-First-look-wallpaperஇந்த நிலையில் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம்.

இந்த படத்தில் ‘காதல்’ அதிரடி, நகைச்சுவை  போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

இது போல் இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்து உள்ளனர்.