ஆக. 14- ஹன்சிகா மொத்வானி இந்த வருடம் நடித்து வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து ஹன்சிகாவை திரையுலகினர் அதிர்ஷ்ட தேவதை என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு நடிகையாக மழை, வெயில் என பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் தேர்ந்து எடுப்பதும், என் பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன்.