Home Featured கலையுலகம் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ பட முன்னோட்டம் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ பட முன்னோட்டம் வெளியீடு!

924
0
SHARE
Ad

Manithan-movie-postersசென்னை – ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஐ.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி”யை தொடர்ந்து ஹன்சிகா இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இயக்குனர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இணைந்துள்ளார். ஒளிப்பதிவு- மதி, படத்தொகுப்பு – மணிகண்ட பாலாஜி.

படம் குறித்து கூறிய இயக்குனர் அஹமத்; இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இரசிகர்களிடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

 

‘மனிதன்’ பட முன்னோட்டம்: