Home Featured இந்தியா ஆந்திரா-தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 128 பேர் பலி!

ஆந்திரா-தெலுங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 128 பேர் பலி!

698
0
SHARE
Ad

Eveningஐதராபாத் – ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் 128 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆந்திர வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதில் தெலங்கானாவில் 78 பேரும், ஆந்திராவில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

heat-waveதெலங்கானாவின் பேரிடர் மேலாண்மைத் துறையினர் கூறுகையில், மெஹபூபா மாவட்டத்தில்தான் அதிகளவில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாகவும், இங்கு மட்டும் 38 பேர் பலியானதாகவும், மேடக் மாவட்டத்தில் 21 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிகிறது.

#TamilSchoolmychoice