Home Featured தமிழ் நாடு பிரேமலதாவை முதல்வராக்க விஜயகாந்த் ரகசிய யாகமா?

பிரேமலதாவை முதல்வராக்க விஜயகாந்த் ரகசிய யாகமா?

739
0
SHARE
Ad

vijayakanth-premalatha76சென்னை – தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றியே தீர்வது என்ற நோக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ரகசிய யாகம் ஒன்று நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது தான் கடந்த மாதம் வரை கேள்வியாக இருந்தது. ஆனால், சில தினங்களிலேயே மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்தார் விஜயகாந்த். அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே, மக்களிடம் பிரச்சாரம் ஒருபுறம் சூடுபறக்க நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் ரகசிய யாகம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாம்.

#TamilSchoolmychoice

இதற்கென தஞ்சையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வேத விற்பன்னர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு, நள்ளிரவில் விஜயகாந்த் வீட்டில் யாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. எப்படியோ விஷயம் வெளியில் கசிந்து விட்டது. இந்தப் பூஜையில் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பங்கேற்றதாகத் தெரிகிறது.

அதோடு, விஜயகாந்தின் ஜாதகப்படி அவருக்கு ஒன்பதரை ஆண்டுகள் மட்டுமே நாற்காலி ராசி இருப்பதாக அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளாராம். அதன்படி, ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் இருந்துள்ளார்.

எனவே, அடுத்ததாக முதல்வர் நாற்காலியில் விஜயகாந்த் அல்லது பிரேமலதாவை அமர வைக்கும் நோக்கத்தில் இந்த யாகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியால் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், கட்சி நலன் கருதியும் இந்த யாகம் நடத்தப்பட்டதாம்.