Home Featured நாடு பொதுத்தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் – காலிட்டுக்கு ரபிசி சவால்!

பொதுத்தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் – காலிட்டுக்கு ரபிசி சவால்!

499
0
SHARE
Ad

Rafiziகோலாலம்பூர் – அடுத்த பொதுத்தேர்தலில் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி இன்று சவால் விடுத்துள்ளார்.

அரசாங்க இரகசியங்கள் சட்டத்தின் கீழ் ரபிசி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் வேண்டுமென்றே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு பரிதாபமாகக் காட்சியளித்தார் என சர்ச்சை உருவானது.

அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ரபிசி, “நான் நடிக்கின்றேன் என்று (@KBAB51 – காலிட்டின் டுவிட்டர்) அறிக்கை கூறுகின்றது, நான் இது குறித்து எனது வழக்கறிஞருடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுப்பேன். ஒருவேளை ஐஜிபி அரசியல் விளையாட்டு விளையாட வேண்டும் என்று நினைத்து எனக்கு எதிராக பாண்டான் தொகுதியில் போட்டியிடட்டும்” என்று ரபிசி சவால் விட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, காவல்துறை கூறியதன் அடிப்படையில் தான் ரபிசி, முதுகிற்குப் பின்னால் கைகளைக் கட்டியிருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று ரபிசி மீது குற்றவியல் அவதூறு வழக்கு மற்றும் அரசாங்க இரகசியங்கள் சட்டம் (ஓஎஸ்ஏ) 1972-ன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த மார்ச் 24, மார்ச் 28-ம் ஆகிய இரு தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில், முன் அனுமதியின்றி 1எம்டிபி கணக்காய்வு அறிக்கையின் 98-ம் பக்கத்தைக் கசியவிட்டார் என்றும், மற்றொரு அறிக்கையைக் கையில் வைத்திருந்தார் என்றும் அவர் மீது இன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.