Home Featured நாடு கெவின் மொராயிஸ் வழக்கு: மரபணுக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துப்போகவில்லை!

கெவின் மொராயிஸ் வழக்கு: மரபணுக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துப்போகவில்லை!

816
0
SHARE
Ad

Kevin moraisகோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், சேகரிக்கப்பட்ட மரபணுக்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரபணுக்களுடன் உறுதியாகத் தீர்மானிக்கும் வகையில் ஒத்துப்போகவில்லை என உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

‘அறியப்படாத மரபணு (Unknown)’, ‘மேல் ஒன் (male one)’ என்ற இரு மரபணுக்களுக்கும் பெயரிட்டு, பரிசோதனைகள் மேற்கொண்ட மரபணுப் பரிசோதனை நிபுணர் நோர் ஐடோரா சாயிடான், அவற்றில், ‘அறியப்படாத மரபணு’ கெவின் மொராயிசின் இரு சகோதரர்களான டத்தோ ரிச்சர்டு மற்றும் டேவிட் ரமேசிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளுடன் ஒத்துப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ‘மேல் ஒன்’ என்ற மற்றொரு மரபணு, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 11 மரபணு மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை என்றும் நோர் ஜடோரா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

#TamilSchoolmychoice