பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் தலைவர் என்பதற்கு நல்ல உதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். 1எம்டிபி நிர்வாக முறைகேட்டால் இறையாண்மை நிதியில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு முழுப் பொறுப்பேற்று அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நஜிப்புடன் பாஸ் தலைவர் ஹாடி அவாங் நட்பு பாராட்டி வரும் நிலையில், பாஸ் கட்சியின் துணைத்தலைவரிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், பாஸ் தலைவர் ஹாடி அவாங் இது குறித்து விரைவில் கருத்துத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.