Home Featured கலையுலகம் பாபி சிம்ஹா – நடிகை ரேஷ்மிக்கு வரும் 22-ஆம் தேதி திருமணம்!

பாபி சிம்ஹா – நடிகை ரேஷ்மிக்கு வரும் 22-ஆம் தேதி திருமணம்!

799
0
SHARE
Ad

Bobby-Simha-and-Reshmi-Menon-Engagementசென்னை – இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை ரேஷ்மி மேனன். அதன் பிறகு தேநீர்விடுதி உள்பட சில படங்களில் நடித்தார். பாபி சிம்ஹாவுடன் உறுமீன் படத்தில் நடித்த போது, பாபி சிம்ஹாவுக்கும் – ரேஷ்மி மேனனுக்குமிடையில் காதல் மலர்ந்தது.

வழக்கம் போல, நாங்க காதலிக்கவில்லை, நட்பு மட்டும்தான் என்று கூறிவந்தவர்கள்  கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் வரும் 22 -ஆம் தேதி திருப்பதியில் நடக்கிறது.

24-ஆம் தேதி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர். திருமணத்துக்குப் பின் நடிப்பதில்லை என்று ரேஷ்மி மேனன் முடிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice