ஆக. 16- பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15–ந்தேதி மாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து அவரது மனைவி செங்கமலம் (வயது 55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின்னர் அவர் சோகமாக இருந்தார்.
இதுபற்றி அறிந்ததும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் நிர்வாகிகள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். செங்கமலத்தின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார்.
Comments