Home உலகம் இங்கிலாந்து அரசை உளவு பார்த்ததாக இளவரசர் சார்லஸ் மீது புகார்

இங்கிலாந்து அரசை உளவு பார்த்ததாக இளவரசர் சார்லஸ் மீது புகார்

532
0
SHARE
Ad

Prince-Charlesலண்டன், ஆக. 19– இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசை உளவு பார்த்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸ்சின் ஊழியர் ஒருவர் அரசு அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணி புரிகிறார்.

அதே போன்று, மற்றொரு ஊழியர் சுற்றுச்சூழல் மற்றும் உணவு துறை அமைச்சகத்தின் கிராமப்புற கொள்கை மேம்பாட்டு குழுவில் 14 மாதங்களாக பணிபுரிந்தார்.

#TamilSchoolmychoice

அவர்கள் மூலம் அங்கிருந்து அரசை உளவு பார்த்ததாக இளவரசர் சார்லஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் மற்றும் தற்போதைய மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் சார்லஸ் தரப்பில் இப்புகாருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அலுவலக ஊழியர்கள் பணி நிமித்தமாக தான் அமைச்சக அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டனர். வேறு எந்த நோக்கத்துக்காகவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.