Home One Line P2 கொவிட்-19 : அரண்மனைக்குள்ளும் நுழைந்தது! இளவரசர் சார்லசுக்கும் தொற்று!

கொவிட்-19 : அரண்மனைக்குள்ளும் நுழைந்தது! இளவரசர் சார்லசுக்கும் தொற்று!

879
0
SHARE
Ad

இலண்டன் – உலகம் முழுவதிலும் எல்லா நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொவிட்-19, ஏழை, பணக்காரன் என யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறப்படுவதுக்கு ஏற்ப, அரச குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

பிரிட்டனின் அரச வம்சத்தின் மகுடத்திற்கான அடுத்த வாரிசான இளவரசர் சார்லசுக்கும் கொவிட்-19 தொற்று பீடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதன் வழி, அரண்மனைக்குள்ளும் அந்த கொடிய நச்சுயிரி நுழைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரிடம் கொவிட்-19 தொற்றுக்கான சில அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து 71 வயதான அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இளவரசர் சார்லஸ் முதலில் கைகுலுக்க கையை நீட்டி விட்டு, பின்னர் சடாரென பின்னுக்கு இழுத்துக் கொண்டு, இந்திய பாணியில் வணக்கம் சொன்ன காட்சிகள் பரவலாக உலா வந்தன.

அப்படியிருந்தும் அவருக்கும் கொவிட்-19 தொற்றியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகமான பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதால் அதன் மூலம் அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆகக் கடைசியாக அவர் மார்ச் 12-ஆம் தேதி தனது தாயார் எலிசபெத் அரசியாரைச் சந்தித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.