கோலாலம்பூர், ஆக. 21- தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது.
அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது.
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் இருக்கும்.
தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும். உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள் வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும் பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.