திருவண்ணாமலை, ஆக.21– திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்கபட்டுள்ளது. இதில் 100 மாணவ–மாணவிகள் புதிதாக சேர்க்கபட்டுள்ளனர்.
இதன் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொளி உரையாடல் மூலமாக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
வகுப்புகள் தொடங்கபட்ட பின்னர் மருத்துவ கல்லூரியில் மருத்துவமனை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments