Home இந்தியா பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை

பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை

487
0
SHARE
Ad

அகமதாபாத், ஆக. 26- பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் சபர்கந்தா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கியதற்காக அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அவர் பேசியதாவது:-

#TamilSchoolmychoice

Narendra_Modiஊழல் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து நீக்குவதற்காக 1974-ம் ஆண்டு இளைஞர்கள் ஒன்றுகூடி, நவநிர்மான் அந்தோலன் என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். அந்த இயக்கத்தின் வேலை இன்னும் முடிந்துவிடவில்லை.

பிரதமருக்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் அதிக ஊழலில் மூழ்கிவிட்டதால் பரந்து, விரிந்து காணப்படும் அகண்ட ஊழல், பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே அழித்து விட்டது.

சராசரி மக்கள் கூட மேம்பாடு அடைந்து வாழவேண்டும் என்பதே நமது நோக்கம். இந்த நோக்கத்தின் மூலம் மக்களின் உயர்வுக்காக நமது அரசு பாடுபட்டு வருகிறது. உலகத்தின் பெருமை என்று குஜராத்தை கூறும் அளவிற்கு நம் மாநிலத்தை முன்னேற்ற நமது அரசு பணியாற்றி வருகிறது.

1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நவநிர்மான் அந்தோலன் இயக்கத்தின் தத்துவத்தை நாம் முன்னெடுத்துச் சென்றால், தற்போதைய ஊழல் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை விடுவித்து, நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.