Home உலகம் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று சந்திக்கிறார்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று சந்திக்கிறார்

593
0
SHARE
Ad

இஸ்லாமாபாத், ஆக. 26- பிரதமர் நவாஸ் ஷரிப்பின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வரும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் இன்று அவரை சந்தித்து பேசுகிறார்.

pakistan-taliban-prisoners.jpeg1-1280x960ஹமீது கர்சாய்வுடன் வரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் மந்திரிகள், மூத்த அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழுவினர் இந்த சந்திப்பின்போது உடன் இருப்பார்கள். இரு நாடுகளுக்கிடையேயான பொது விவகாரங்கள், எல்லைப் பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2014 டிசம்பரில் ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் திரும்ப பெறப்படும் நிலையில், நடைபெறும் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுநடத்த பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீசை கடந்த மாதம் நவாஸ் ஷரிப் அனுப்பி வைத்தார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாட்டிற்கிடையிலான பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

அதன் விளைவாக, இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிரந்தரத் தன்மை நிலவ பாகிஸ்தான் அரசு உதவி செய்ய முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.