Home கலை உலகம் 50 நாட்களை தாண்டி ஓடும் ‘சிங்கம் 2’

50 நாட்களை தாண்டி ஓடும் ‘சிங்கம் 2’

565
0
SHARE
Ad

ஆக. 26- ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சிங்கம் 2’. இதில் அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

Singam 2 Songs Lyricsதூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் ஆயுதக்கடத்தலை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் அதிகாரியான சூர்யா நியமிக்கப்படுகிறார். அவர் என்.சி.சி. ஆசிரியர் வேடத்தில் தூத்துக்குடி வந்து கடத்தல் கும்பலை அழிப்பதே கதை.

இதில் அஞ்சலி ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியுள்ளார். இப்படம் கடந்த மாதம் 5-ந்தேதி உலகமெங்கும் திரையிடப்பட்டு நேற்றுடன் 50 நாள் ஆகிறது.

#TamilSchoolmychoice

தற்போது சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் ஒருபடம் 50 நாட்களை தாண்டி ஓடுவது கஷ்டம். அதையும் மீறி ‘சிங்கம் 2’ 50 நாட்களை தாண்டி ஓடுவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.