ஆனால், ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் அவரை அதிரடியான ஆக்ஷன் கதாநாயகனாக்கியது. அதனால் அதையடுத்து அமைதியா வேடம் உள்ள கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.
அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் அனில் கொறிப்பது போன்று ஆங்காங்கே இருந்தால் போதும்.
அதனால்தான், சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில இயக்குநர்களின் அதிருப்திக்கு அவர் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் லிங்குசாமி சொன்ன மும்பையை மையமாகக்கெண்ட கதை சூர்யாவை வெகுவாக கவர்ந்தது. சிங்கம் படத்தில் சென்னை தாதா பிரகாஷ்ராஜை துரத்தி துரத்தி அடித்தது போன்று இந்த படத்திலும், மும்பை தாதாக்களை பிரிச்சு மேய்கிறாராம் சூர்யா.
அதற்கடுத்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்கிறார். அந்த படத்தின் கதையை இன்னமும் ஹரி சொல்லாதபோதும், அது சிங்கம் 3-னாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறாராம் சூர்யா.