Home இந்தியா இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கௌரவ டாக்டர் பட்டம்

இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்க்கு கௌரவ டாக்டர் பட்டம்

521
0
SHARE
Ad

afghanistanபக்வாரா, மே 21- ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீது கர்சாய் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

அவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபெசனல் பல்கலைக்கழகத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்-அமைச்சர் பிராகாஷ் சிங் பாதல் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

மதிப்பிற்குரிய இந்த பெரிய பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை, மிகவும் மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கர்சாய் மனம் நெகிழ்ந்தார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மேம்பாட்டிற்கு இந்தியா வழங்கிய 200 கோடி டாலர் உதவிக்காக அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.