Home வாழ் நலம் வாய் உணவு மண்டலத்தின் வாசல் – அதிக சுத்தம் தேவை

வாய் உணவு மண்டலத்தின் வாசல் – அதிக சுத்தம் தேவை

585
0
SHARE
Ad
lip-balm3ஆகஸ்ட் 29 – உணவு மண்டலத்தின் வாசலான வாயை கவனமாகக் கவனித்து வர வேண்டும். வாய் பல்வேறு நோய் அறிகுறிகளையும் காட்டலாம். அவற்றில் சில…

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது இதற்கு, உடலில் நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது என்று அர்த்தம். உடலில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த ‘டீஹைட்ரேஜன்’ ஏற்படுகிறது. மேலும் அதிகமாக வியர்ப்பது, நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவதற்குக் காரணமாகும்.

தீர்வு: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதனுடன் பழங்களை அல்லது பழச்சாறை அருந்துவது பலன் தரும். பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் பற்களில் ஈறு வடியும்.

ஈறுகளிலும், அவற்றின் அடியில் இருக்கும் எலும்புகளி ஈறுகளில் ரத்தம் வடிதல்லும் தொற்றுநோய் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

#TamilSchoolmychoice

தீர்வு: தினமும் பற்களை சுத்தமாகத் துலக்குவதும், பற் காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்டிபாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் மூலம் வாய் கொப்பளிப்பது நல்லது. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்வாய்ப்புண் இருந்தால் இவ்வாறு வாய் முழுவதும் வலி ஏற்படும்.

அதிகமான மன அழுத்தத்தாலும் வாய்ப்புண் ஏற்படலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு மற்றும் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி 12 குறைவினாலும் இப்படி ஏற்படலாம்.

தீர்வு: மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தியானம், யோகா செய்வதாலும் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் கிருமித் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.