Home கலை உலகம் “சிறை சென்றாலும் என் பவர் குறையவில்லை” – ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் பேட்டி!

“சிறை சென்றாலும் என் பவர் குறையவில்லை” – ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் பேட்டி!

494
0
SHARE
Ad

power-star-srinivasan_350_042613010004சென்னை, ஆகஸ்ட் 29 – பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி, சிறை சென்று தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான் இருப்பதாக கூறியுள்ளார். சித்த வைத்திய டாக்டராக இருந்த சீனிவாசன் ‘லத்திகா’ எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார்.

சினிமாவில் வந்த சிறிது நாட்களிலேயே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் போல் காட்டிக்கொண்டவர் டாக்டர் சீனிவாசன். அதனைத் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமான அவர், இயக்குநர் ஷங்கரின் ஐ, ராமநாரயணின் ஆர்யா சூர்யா, வெங்கடேஷின் சும்மா நச்சுன்னு இருக்கு, சந்தானத்துடன் யா யா யா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

இப்படங்களின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், அவர் மீது அடுக்கடுக்கான பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சீனிவாசன், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அவர் நடித்த மூன்று படங்களும் வெளியிடுவதற்குத் தயாராகியுள்ளன. அவர் எப்படியும் விடுதலையாகி விடுவார். அவரை வைத்து விளம்பரம் செய்து படத்தை வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால் அவர் விடுதலையாகும் சாத்தியக்கூறுகள் தென்படாததால் அவர் இல்லாமலேயே படத்தை வெளியிட முடிவு செய்து இருந்தார்கள். இதற்கிடையே இரண்டு நாள் ஜாமினில் நேற்று வெளியே வந்துள்ளார் சீனிவாசன்.

ஜாமின் கிடைத்த கையோடு சென்னை வந்த சீனிவாசன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  தமிழ் சினிமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கும். யாரோ செய்த சதி செயலால் நான் இப்படி மாட்டிக்கொண்டேன். ஆனாலும் பவர் இன்னும் பவராத்தான் இருக்கிறான். நான் நடித்துள்ள ஆர்யா சூர்யா, சும்மா நச்சுன்னு இருக்கு, யா யா போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. இந்தப்படங்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும். எனது ஆனந்த தொல்லை படத்தை தீபாவளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளேன். சிறையில் நான் இருந்தபோது, அது எனக்கு சிறை மாதிரியே தெரியவில்லை. அது ஒரு ஆசிரமம் போன்று தான் இருந்தது. அங்குள்ள சுமார் 1,400 தமிழக போலீஸார் என்னை பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.மேலும் அவர்கள் அனைவரும் எனது ரசிகர்களாகவும் மாறிவிட்டனர். விரைவில் இந்த பிரச்னைகளில் எல்லாம் இருந்து மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.