Home கலை உலகம் சிறைக்கு போனவனெல்லாம் குற்றவாளிகள் இல்லை! – பவர் ஸ்டார்

சிறைக்கு போனவனெல்லாம் குற்றவாளிகள் இல்லை! – பவர் ஸ்டார்

591
0
SHARE
Ad

செப். 6- மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில்  அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் பிணை விடுப்பில் வெளிவந்தார்.

தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக கூறினார். பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

big_More_trouble_for_Power_Star-e11c2a4ad397959e0ab54416f5975ddfநான் யாரையும் ஏமாற்ற வில்லை. சில துரோகிகள் என்னை பழிவாங்கி விட்டனர். பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கேயும் ஓடிப்போகவில்லை. தங்கள் வேலையை முடித்துக் கொடுக்க சிலர் பணம் கொடுத்தனர்.

#TamilSchoolmychoice

அதை இன்னொருத்தரிடம் கொடுத்தேன். அவர் ஏமாற்றி விட்டார். மோசடி வழக்கில் சிக்கிய போது என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூட எதிரியாகி விட்டனர்.

சினிமாவில் நடிக்க வந்தேன். நிறைய பேர் என்னை ஏமாற்றினர். ரூ.20 கோடி வரை சினிமாவில் இழந்து விட்டேன். அந்த இயக்குனர்கள் யார் என்பதை சொல்ல விரும்பவில்லை.

Power-Starநான் சிறையில் இருந்த போது ரூ.8 கோடியில் கட்டிய மருத்துவமனையை  சிலர் சூறையாடினர். பொருட்களையெல்லாம் அள்ளிச் சென்றனர்.

சிறைக்கு போனவனெல்லாம் குற்றவாளிகள் இல்லை. வெளியில் இருப்பவனெல்லாம் நல்லவனும் இல்லை.

சிறையில் வாழ்க்கை கஷ்டமாக இருந்தது. என் இடத்தில் இன்னொருத்தர் இருந்து இருந்தால் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்.

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். சினிமாவில் நிறைய பேரை தம்பி என்றுதான் அழைப்பேன். சிறையில்  இருந்த போது அவர்கள் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை.

நடிகர் பிரசாந்த் மட்டும் விசாரித்தார். ஒருத்தனுக்கு கஷ்டம் வந்தால் கூட இருக்கனும். அது தான் நட்பு என்னை வந்து பார்க்காதவர்கள் இதை உணர வேண்டும்.

இந்த மாதம் நான் நடித்த மூன்று படங்கள் வெளியாகிறது. இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.