Home கலை உலகம் பவர் ஸ்டாரின் புதிய அவதாரம்

பவர் ஸ்டாரின் புதிய அவதாரம்

956
0
SHARE
Ad

செப்.3- ‘லத்திகா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.

என்னுடைய ஒரே போட்டி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிதான் என்று கூறியதன் மூலம் ரசிகர்களிடையே பிரமலமானார்.

அதன்பின் சந்தானம் தயாரித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தார்.

#TamilSchoolmychoice

powerstar-srinivasan-sam-andersonஅதனால் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’, சங்கரின் ‘ஐ’ போன்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

நடித்துக்கொண்டிருக்கும்போது மோசடி புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது பிணை ஆணையில் வெளிவந்து படங்களில் நடித்துக்கொடுத்தார். ‘வட போச்சே’ என்ற படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதுகுறித்து அவர் கூறியதாவது:-

Power-Starபாண்டிச்சேரியில் நடந்த படப்பின்போது ரசிகர்கள் என்மீது காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது.

‘வட போச்சே’ முழு நகைச்சுவை படமாக இருக்கும். ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தை காட்டிலும் நகைச்சுவை அதிகமாக இருக்கும். இந்த படத்தின் கதை கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இரண்டு இளைஞர்களின் எளிமையான கதையாகும்.

இந்தப்படத்தில் ஒரு பாடலை என் சொந்த குரலில் பாடியுள்ளேன். அந்தப் பாடலை ரசித்து பாடியுள்ளேன். மேலும், டி.ஆர். ஒரு பாடலுக்கு நடனம்  ஆடியுள்ள குத்துப்பாட்டு பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும்.

படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் நான் நடனம் ஆடியுள்ளேன். இப்படத்தில் வரும் ‘சூப்பர் ஸ்டார் யாரு பவர பாரு’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.