Home நாடு மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு – அமைச்சர்களுக்கு மட்டும் இலவசமா? – ரபிஸி கேள்வி

மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு – அமைச்சர்களுக்கு மட்டும் இலவசமா? – ரபிஸி கேள்வி

763
0
SHARE
Ad

rafizi 3 bilionகோலாலம்பூர், செப்டம்பர் 4 – நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெயின் விலை நேற்று முதல் லிட்டருக்கு 20 காசு அதிகப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர்களின் கார்களுக்கு இலவசப் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது. அது நிறுத்தப்பட்டு அவர்களும் சாதாரண மக்களைப் போல் காசு கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்க வேண்டும். அப்போது தான் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமார் 70 அமைச்சர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் இலவச பெட்ரோல் கிடைக்கிறது என்றும், அதனால் அவர்களுக்கு பெட்ரோல், டீசலின் உயர்வால் மக்கள் அடையும் துன்பம் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாட்டின் சுமையை எல்லோரும் தான் சுமக்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் அந்த சுமை தெரியாமல் இலவசமாக வழங்குவது என்ன நியாயம்? இதை உடனடியாக நஜிப் செய்ய வேண்டும். அப்போது தான் புத்திசாலித்தனமாக கருத்து சொல்ல வரும் அமைச்சர்களுக்கு உண்மை நிலை புரியும்” என்றும் ரபிஸி கூறியுள்ளார்.