கோலாலம்பூர், செப்டம்பர் 4 – சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்ட விவகாரத்தில் தேசிய இலக்கியவாதியான சமட் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு விசாரணை செய்யப்பட்டு பின்னர் 2.30 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து மலேசியாகினி செய்தி இணையதளத்திற்கு சமட் வெளியிட்ட தகவலில், தான் கைது செய்யப்பட்டு டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்டதற்காக ஹிஷாமுடின் ரைஸ், ஆடம் அட்லி ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று சமட்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.