கோலாலம்பூர்,செப்டம்பர் 3 – தேசிய காவல்துறை தலைவர் காலிட் அபு பக்கர் குற்றம்சாட்டுவதைப் போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் நேற்று வீட்டில் தான் இருந்தேன் என்று தேசிய இலக்கியவாதி சமட் தெரிவித்துள்ளார்.
“என்னைத் தேடி காவல்துறையினர் யாரும் வரவில்லை. பொய்யான அவதூறுகளை என் மேல் சுமத்துகிறார்கள்” என்று மலேசியா கினி இணைய செய்தித் தளத்திற்கு சமட் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்ட விவகாரத்தில் தேசிய இலக்கியவாதியான சமட்டை தாங்கள் தேடி வருவதாகவும், நேற்று அவர் வீட்டிற்கு சென்ற போது அவர் காவல்துறை கண்ணில் படாமல் தலைமறைவாகிவிட்டார் என்று தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் இன்று அறிக்கை விடுத்தார்.