Home அரசியல் “பட்டம் என்ன? என் குடியுரிமையைப் பறித்தாலும் கவலையில்லை” – பாக் சமட் அதிரடி

“பட்டம் என்ன? என் குடியுரிமையைப் பறித்தாலும் கவலையில்லை” – பாக் சமட் அதிரடி

591
0
SHARE
Ad

samad merdekaகோலாலம்பூர், செப்டம்பர் 5 – தேசிய இலக்கியவாதி என்ற பட்டத்தை தன்னிடம் இருந்து பறிக்கும் படி சில தரப்புகள் கூறி வருவதாகவும், ஆனால் அதைப் பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் தேசிய இலக்கியவாதியும், பெர்சே இணைத் தலைவருமான பாக் சமட் கூறியுள்ளார்.

மேலும், தன்னிடம் இருந்து குடியுரிமையையும் பறிக்க இந்த அரசாங்கம் முடிவெடுத்தாலும் பறித்துக் கொள்ளட்டும் என்று 81 வயதான சமட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்ட விவகாரத்தில் தேசிய இலக்கியவாதியான சமட்டை நேற்று அதிகாலை காவல்துறை கைது செய்து, 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice