ஆக. 30- ஒரு படம் வெற்றி பெறாவிட்டால் அந்த படத்தில் நடித்த நடிகை ராசியில்லாதவர் என சினிமா ஒதுக்கி வைத்திவிடுவது வழக்கம்.
அப்படி சில தெலுங்கு நடிகர்களின் படமும் சமீபத்தில் தொடர்ந்து தோல்வியடைந்தது.
தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் காஜர் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியது.
தற்போது அந்த இடத்தை ஸ்ருதிஹாசனும் பிடித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த பவன் கல்யாணுக்கு ‘கப்பார் சிங்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
அந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
அதேபோல் ரவி தேஜாவுடன் ‘பலுபு’ என்ற படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படமும் வெற்றி பெற்றதால், தெலுங்கில் ஸ்ருதிஹாசன் அதிர்ஷ்ட நடிகையாக உருவாகியுள்ளார்.
இதனால் படதயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர்.